காமதேனு தீபாவளி

தீபாவளியை முன்னிட்டு நூறு கோடிக்கும் அதிகமான மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட தீபாவளி விளக்குகள், ஊதுவத்திகள், சாம்பிராணி, லட்சுமி, விநாயகர் சிலைகள் போன்றவற்றைத் தயாரித்து சந்தைப்படுத்த ‘காமதேனு தீபாவளி 2021’ என்ற பிரச்சாரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு உள்ளது. முன்னாள் கேபினட் அமைச்சரும், ராஷ்ட்ரிய கமதேனு ஆயோக்கின் முன்னாள் தலைவருமான டாக்டர். வல்லபாய் கதிரியா, காமதேனு தீபாவளி குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாரதம் முழுவதும் உள்ள பல பசு தொழில் முனைவோர், பசு வளர்ப்போர், பசு பிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் புருஷோத்தம் ருபலா பங்கேற்றார்.

இந்த கோமய விளக்குகள் பயன்பாட்டால் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் ரசாயன விளக்குகள், சீன விளக்குகளின் பயன்பாட்டை குறைக்கமுடியும். பசுக்களை காக்க முடியும், அதனை வளர்ப்போர்க்கு பொருளாதார ரீதியில் உதவமுடியும். தேசிய தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்க முடியும் என்பதுபோன்ற பல்வேறு நன்மைகள் உள்ளன. கடந்த ஆண்டு கோடிக்கணக்கான மாட்டு சாண விளக்குகள் பாரதம் முழுவதும் தயாரிக்கப்பட்டன. ராஷ்ட்ரிய கமதேனு ஆயோக் அமைப்பு பாரதம் முழுவதும் பல தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இதற்கான பயிற்சிகள் அளித்தது. இது அதிக எண்ணிக்கையிலான மாட்டு சாணம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின. இம்முறை இந்த பிரச்சாரம் இந்த முயற்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.