கக்கன் என்னும் அரசியல் துறவி

ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில்,சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன “உயர் திரு கக்கன் பிறந்த தினம்” இன்று….

தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்….

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது…

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். ராம்சாமி தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்…. கக்கன் தமையனார் விஸ்வநாதன் கக்கன் ஒரு வழக்கறிஞர் ஆவர் .அவர் இந்து இயக்கங்களின் தீவிர ஆதரவாளார் என்பது கூடுதல் தகவல் ..

அவர் காவல்துறை அமைச்சராக இருந்தபொழுது சாதி கலவரங்கள் நேர்மையாக இரும்புகரம்கொண்டு அடக்கபட்டது, சாதி கலவரங்களை தடுக்க உளவு போலிஸ் துறை எல்லாம் உருவாக்கினார்

மிக பெரும் திட்டங்களை உருவாக்கியவர், பெரும் பதவியில் இருந்தாலும் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலே படிக்க வைத்தார், கக்கனின் சிபாரிசில் வேலைக்கு வந்தவர்கள் என்றோ, கக்கனின் சிபாரிசில் தப்பிய குற்றவாளி என்றோ ஒருவனையும் காட்ட முடியாது

அரசியல் தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் அவர் , அவரைத்தான் எதிர்த்து நின்றன திமுக புலிகள்.

அதுவும் ராம்சாமி நியாயமாக‌ சொன்னார், “இந்த கக்கனோ காமராஜரோ பிராமணர் இல்லிங்க‌, அவர்களும் தாழ்த்தபட்ட சூத்திரர்கள். நன்றாகத்தான் ஆளுகின்றார்கள்.

ஏ திமுக அயோக்கிய பயலுகளா அவர்களை ஆளவிடுங்கடா.. உங்கள பற்றி எல்லோரையும் விட எனக்கு நல்லா தெரியும்.”

அவர் சொன்னதை எல்லாம் திமுக கேட்கவில்லை

எங்கு ராம்சாமி பேச்சை கேட்கவேண்டுமோ அங்கு மிக சரியாக காதை பொத்திகொள்பவர்கள் அவர்கள்

1967ல் திராவிட புரட்சியில் கக்கன் தோற்றார், 1971லும் தோற்றார். நாட்டுக்காக, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக முனிவர் போல உழைத்துகொண்டிருந்த அவர், காமராஜர் போன்றோரை விரட்டிவிட்டுத்தான் திமுக ஆட்சிக்கு வந்தது

இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்…நினைவு திரும்பாமல் யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.

பொதுப்பணித்துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேல் மதுரை வந்த அவர், தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். (அந்த விடுதியே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது தான்.) ஆனால் அங்கு வேறு அதிகாரி யாரோ தங்கியிருந்தார்கள். இதையறிந்த கக்கனுடன் வந்த அதிகாரிகளுக்கு கொஞ்சம் ஷாக்காக இருந்தது. தனியார் விடுதிக்குச் செல்லலாம் என்றார்கள் உடனிருந்த அதிகாரிகள். பயணியர்விடுதி கண்காணிப்பாளருக்கோ பதற்றம். “தங்கியிருப்பவரை எழுப்பி விடுகிறேன்” என்றார். ஆனால் கக்கன், “வேண்டாம். அதிகார நடைமுறைப்படி அமைச்சருக்கு தான் இங்கு முன்னுரிமை என்றாலும் இங்கு தங்கியிருப்பவரும் நம்மைப் போன்றவர் தான். தூக்கத்தில் எழுப்பி யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம்” எனக் கூறிவிட்டு மதுரையிலுள்ள ஒரே அறை கொண்ட தனது தம்பி வீட்டிற்குச் சென்று இரவு தங்கினார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இதே விடுதியில் தங்கிய அமைச்சர் ஒருவர், தனக்கு சுடசுட தோசை வாங்கிவராத தாசில்தார் மீது தோசையை தூக்கியெறிந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
அமைச்சராக இருந்த போது அலுவலகத்திலிருந்து காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் கக்கன். கார் வீட்டுக்குள் நுழையும் அந்த வினாடியில் தனது பணியாளர் ஒரு கேனைத் தூக்கி வருவதைப் பார்த்தார். அவரிடம் என்ன என்று கேட்க “அம்மா மண்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னார்கள். அது தான் இது..” என்றார். உடனே காரை நிறுத்தியதோடு கேனையும் காம்பவுண்ட் சுவருக்கு வெளியே வைக்கச் சொன்னார். டிரைவரை அனுப்பி வீட்டுக்குள் இருந்து மனைவியை வெளியே வரச்சொல்லி ” இந்த மண்ணெண்ணெயை வாங்கி வந்திருப்பவர் யார் தெரியுமா? அவர் அரசு ஊழியர். எனக்கு உதவிக்காக நியமிக்கப்பட்டவர். அவரை உனது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது..” என கடுமையாகச் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்திலிருந்த வர்களெல்லாம் பார்த்தார்கள். அழுதுகொண்டே வீட்டுற்குள் சென்றார் கக்கனின் மனைவி. சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு பின்னர் வீட்டுக்குள் நுழைந்தார் கக்கன்.

Top of Form

கக்கனை அரசியலுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் வைத்தியநாதய்யர். அதை உயர்ந்தநிலையை அடைந்தபோதும் கக்கன் மறக்கவில்லை. கக்கன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது 1955-ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன். அவரது உறவினர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது. வைத்தியநாதய்யரின் குழந்தைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்த்தனர். “இது முறையல்ல” என ஐயரின் பிள்ளைகளை அழைத்துப் பேசினார்கள். ஆனால் அவர்களோ, “நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது” என்றனர். இதைக் கேட்ட ஐயரின் உறவினர்கள் அதிர்ந்து போனார்கள்.

சிலர் கக்கனிடம் “உங்களால் தான் பிரச்னை விலகிக்கொள்ளுங்கள்.” என்றனர். ஆனால் கக்கனோ “இன்று நான் போட்டிருக்கும் கதராடை, இந்த உடல், இந்த பதவி எல்லாமே ஐயர் எனக்குத் தந்தது. நான் இன்றைக்கு மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மாந்தநேயம் தான். அத்தகைய ஐயருக்கு நான் இறுதி சடங்கு செய்யவில்லையென்றால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை..” என்றார். அவர்கள் திகைத்துப் போனார்கள்.

இவரின் நேர்மைக்கு ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்..அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு..

1968-ல நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளர் கக்கன். தேர்தல் முடிந்து நானும் தேர்தலுக்குக் கொடுத்த பணத்தை கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது . கக்கனுக்கு தாங்கமுடியாத வருத்தம். நணபர்கள் என்னவெல்லாமோ சமாதானம் சொன்ன போதும் மனம் ஒப்பவில்லை அவருக்கு ..நண்பரை அனுப்பி அவரது மனைவி கையில் கிடந்த இரண்டு வளையல்களை வாங்கி வித்துட்டு வரச்சொன்னார். அப்போதும் நானூறு ரூபாய் தேறல்ல. வேறும் சில பொருட்களை விற்று நானூறு ரூபாய் தேத்திட்டாரு. பின்னர் சென்னைக்குப் போய் கட்சி பொருளாளரிடம் கணக்கை ஒப்படைத்து விட்டு . “கணக்கை ஒப்படைச்சிட்டேன்” என இவர் காமராசரிடம் போய் சொல்ல அவருக்கு கடுமையான கோபம் வந்தது. “யாரு உன்கிட்ட கணக்கு கேட்டா..” என சத்தம் போட்டாரு. “அது நானே முறை” என்றார் கக்கன். “நீங்க படற கஷ்டம் எனக்குத் தெரியும் அது தான் தேர்தல் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சேன்”ன்னாரு. அப்போது கூட மனைவி நகைகளை விற்று கணக்கை சரி செய்ததை கக்கன் சொல்லல்ல.. அது தாங்க கக்கன்” …

கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… ‘குறை சொல்ல முடியாத மனிதர்,–’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!..