மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் 7 மற்றும் 8ம் தேதிகளில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா சுற்றுப் பயணம் மேற்கொள்ள வுள்ளார். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தலைவர்களின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம், புதிய உத்வேகம் மற்றும் உந்துதலை பெறுகின்றனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்தும் வகையில் ஸ்மிரிதி இரானி, எஸ்.பி. சிங் பாகேல், உள்ளிட்ட ஆறு மத்திய அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களும் விரைவில் மேற்கு வங்கத்தில் சுற்றுப் பயனம் மேற்கொள்வார்கள் என மேற்கு வங்க மாநில பா.ஜ.க துணை தலைவர் சவுமித்ரா கான் கூறினார்.