கேரளா, கண்ணூர் பகுதியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் வினீதா வேணுவும் காவல்துறையில் பணியாற்றும் அவரது கணவரும் கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குண்டர்களால் தொடர்ந்து குறி வைக்கப்படுகின்றனர். கடந்த பிப்ரவரி 2018ல் இளைஞர் காங்கிரஸ் தொண்டரான ஷோயிப் என்பவரை சி.பி.ஐ.எம் குண்டர்கள் குண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்தனர்.இதனை வினிதா அம்பலப்படுத்தினார்.மேலும், கேரளாவில் கொரோனா நோயாளிகள் குறித்த உண்மைத் தகவல்களையும் வெளியிட்டார். இவரது கணவரால்தான் அந்த தகவல்கள் வினிதாவுக்குக் கிடைத்தது என எண்ணிய சி.பி.ஐ.எம் குண்டர்கள் அப்போது முதல், அவர்கள் இருவரையும் சமூக ஊடகங்களிலும் அவர்களின் தேசாபிமானி பத்திரிகையிலும் கேவலமாக சித்தரிப்பது, பொய்யான தகவல்களை கூறுவது, அவதூறு பரப்புவது, கணவருக்கு அடிக்கடி இடமாற்றம் என அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். தினமும் அவர்களால் நாங்கள் சித்ரவதையை அனுபவிக்கிறோம் என்று கூறும் வினிதா, ‘நான் அந்த செய்தியை வெளியிடும் முன்பே இரண்டு மலையாள சேனல்கள் அது குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், என்னை அவர்கள் இதற்கு காரணம் ஆக்குகிறார்கள்.நான் அவர்கள் ஹிட் லிஸ்ட்டில் உள்ளேன் என எனக்குத் தெரியும்.அதனால், ஒரேயடியாக எங்கள் இருவரையும் கொன்றுவிடுங்கள் ‘என சி.பி.ஐ.எம் குண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார் முன்னாள் பத்திரிகையாளரான வினிதா.