ஜார்க்கண்ட் அரசு அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் முஸ்லிம்களின் அழுத்தம் மற்றும் மிரட்டலால் அவர்களின் வசதிக்கு ஏற்ப பள்ளிகளின் பெயர்களை மாற்றம் செய்வது, வாராந்திர விடுமுறையை ஞாயிற்றுக் கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றுவது உள்ளிட்ட செயல்களில் அந்த பள்ளி நிர்வாகங்கள் தன்னிச்சையாக மேற்கொண்டன. இதற்கு அரசிடம் இருந்து முறையாக எவ்வித உத்தரவும் பெறப்படவில்லை. ஜார்கண்டில் இப்படி மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்தது சமீபத்தில் தெரியவந்தது. பத்திரிகைகளில் வெளியான இதுகுறித்த செய்திகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதுகுறித்து விசாரித்த அம்மாநில பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகஸ்ட் 1ம் தேதி ஒரு சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியது. அதில், ‘பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் இயங்கும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஒரு சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியது. அதில், ‘சில உருது அல்லாத பள்ளிகளில் ‘உருது’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும். அறிவிக்கப்பட்ட உருது பள்ளிகளைத் தவிர மற்ற அரசுப் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை விடப்படுவதை உறுதி செய்யவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும், அறிவிக்கப்படாத உருது பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான கல்விச் செயல்பாடுகளும் நடத்தப்படக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் காலை வழக்கம்போல பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். உள்ளூர் நபர்களோ, பள்ளி நிர்வாகமோ அல்லது பிறரோ இந்த உத்தரவை அமல்படுத்துவதில் ஏதேனும் இடையூறு ஏற்படுத்தினால், அது அரசுப் பணிகளுக்கு இடையூறாகவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும் கருதப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த முந்தைய புகார்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.