தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து, ஆப்கானிஸ்தானில் வழ்ந்த கடைசி யூதரான சபுலோன் சிமாண்டோவ் ஆப்கனை விட்டு வெளியேறினார். காபூலில் யூதர்களின் வழிபாட்டுத் தலமான ஜெப ஆலயத்தை அவர் நாற்பது வருடங்களுக்கு மேல் கவனித்து வந்தவர். அது தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. ஆப்கனில் யூதர்களின் வரலாறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. ஹெராட் நகரம் ஒரு காலத்தில் ஆயிரக்கணகான யூதர்களின் வாழ்விடமாக இருந்தது. முஸ்லிம் பயங்கரவாதிகளால் அங்கு பலர் கொல்லப்பட்டனர், சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது சபுலோன் சிமாண்டோவ் வெளியேற்றத்தால் ஆப்கனில் யூத வரலாற்றில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.