அயோத்தி ராமஜென்மபூமி தீர்த்த சேஷத்ர நிதி சேகரிப்பின் ஒருபகுதியாக பூந்தமல்லியில் ஆட்டோக்களில் நிதி சேகரிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டி நிதி சேகரிக்கப்பட்டது.
அதிதி சிங் எம்.எல்.ஏ. ரூ.51 லக்ஷம் சமர்ப்பணம்:உத்திரபிரதேசம் ராய்பரேலி சாதர் சட்டமன்ற உறுப்பினர் (காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ அதிதி சிங் ஸ்ரீராம ஜன்மபூமி ஆலயத்திற்காக ரூ.51 லட்சம் வழங்கினார்.
மணிப்பூர், மோஜிங் மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி சவாரூ ரகுமான் நிதி சமர்ப்பணம் செய்தார்.
தன் டி.வி.எஸ் 50 மொபெட்டில் கூடையில் வைத்து மீன் வியாபாரம் செய்யும் அன்பர் ராமர் கோயில் கட்ட “என் இராமனுக்கு 200 ரூபாய் தருகிறேன்” என்று கூறி மனமுவந்து காணிக்கையளித்தார்.
தூத்துக்குடியில் சங்கரராமேஸ்வரர் கோயில் முன்பு தர்மம் எடுக்கும் வாய் பேசவராத பக்தர் தனது பங்களிப்பை செலுத்தினார்.