ஜல்ஜீவன் முறைகேடுகள்

தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் உள்ள, ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு வரும்2024 மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பை வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 4,600 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இப்பணிகள் ஊரக வளர்ச்சி துறை மேற்கொண்டுள்ளது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் பணிகள் முறையாக நடக்கவில்லை. பணிகள் முடிந்த வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் துவக்கப்படவில்லை. இதுவரை 50 சதவீத திட்ட இலக்கு மட்டுமே எட்டப்பட்டு உள்ளது. பல இடங்களில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. போதாத குறைக்கு இலவச குடிநீர் குழாய் இணைப்பிற்கு போலி ரசீது, கமிஷன், லஞ்சம், இல்லாத வீடுகளுக்கு இணைப்பு என அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சுருட்டுகின்றனர். தமிழகத்தில், இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளும் குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவதை அறிந்த மத்திய ஜல்சக்தி அமைச்சகம், தமிழகத்தில் பணிகளை விரைவுப்படுத்தவும் முறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. குழாய் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு, பிப்ரவரி இறுதிக்குள் குடிநீர் இணைப்பை வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது.