தேசம் முழுவதும் வீடுகளுக்கு நேரடி குடிநீர் குழாய் இணைப்புகளை இலவசமாக வழங்க ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வரும் 2024-ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. அவ்வகையில், மேற்குவங்கத்துக்கு ரூ. 6,998.97 கோடி, குஜராத்துக்கு ரூ. 3,410 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ. 5,117 கோடி, வடகிழக்கு மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.9,262 கோடி, உத்தரபிரதேசத்திற்கு ரூ. 10,870 கோடியை மத்திய ஜல் சக்தித் துறை ஒதுக்கியுள்ளது.