சீனாவை சாடிய ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 11 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகளின் பட்டியலை நிறுத்தி வைத்தது குறித்து பேசினார். உக்ரைன் ‘தண்டனையின்மைக்கு எதிரான போராட்டம்’ குறித்த ஐ.நா மாநாட்டில் பேசிய அவர், “பாதுகாப்பு கவுன்சில் உலக நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.  நாடுகள் தங்கள் பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்கு அரசியல் ஒருபோதும் மறைப்பை வழங்கக்கூடாது. தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து விடுபடுவதை எளிதாக்கக்கூடாது. இதே அறையில், உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதை நாம் சமீபத்தில் பார்த்தோம். இத்தகைய கொடூரமான தாக்குதல்கள் தண்டிக்கப்படாமல் விடக்கூடாது. பாதுகாப்பு கவுன்சில் தனது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமானால் அதற்கு நிலைத்தன்மை இருக்க வேண்டும்” என சீனாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார்.