சிவசேனா எம்.எல்.ஏவுக்கு சிறை

மத்திய மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் நகரில் கடந்த 2018 மே 11 அன்று அசாசுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியினருக்கும் சிவசேனையை சேர்ந்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு பேர் இறந்தனர். 12 காவல்துறையினர் உட்பட சுமார் ஐம்பது பேர் காயமடைந்தனர்.100 க்கும் மேற்பட்ட கடைகள், 80 வாகனங்கள் கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு கிராந்தி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேரை விடுவிக்கும் நோக்கில் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் பிரதீப் ஜெய்ஸ்வால் அங்கு சென்று காவல் நிலையத்தை அடித்து உடைத்ததுடன் பணியில் இருந்த காவலர்களை தாக்கியுள்ளார். இது சம்பந்தமாக நடைபெற்ற வழக்கில், நீதிமன்றம் ஜெய்ஸ்வாலுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்துள்ளது.