சர்ச்சில் ஜெய் ஸ்ரீ ராம்

கர்நாடகாவில் ஹூப்ளியில் காய்கறி விற்பனை செய்துவரும் விஸ்வநாத் என்பவரை, அங்கு புதிதாக கிறிஸ்தவ தேவாலயத்தைக் கட்டி மதமாற்றம் செய்துவந்த பாதிரி சோமு ஆவாரதி, ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் குடும்பத்துடன் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். மனிதநேயத்தைக் கருதி அங்கு சென்ற விஸ்வநாத், அங்கு நடைபெற்ற பிரார்த்தனையில் தனது ஹிந்து மத பிரார்த்தனையை செய்தார். இதனால் கோபமடைந்த பாதிரியும் அங்கிருந்தவர்களும் அவரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து, காவல் நிலையம் சென்று அவர்கள் மீது கட்டாய மதமாற்ற வழக்கில் புகார் அளித்தார் விஸ்வநாத். இச்செய்தியை அறிந்த பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் அந்த தேவாலயத்திற்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ பஜனை பாடி எதிர்ப்புத் தெரிவித்தனர். பாதிரியை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பாதிரி கைது செய்யப்பட்டார். ஹூப்ளி காவல் ஆணையர், “விசாரணை நடந்து வருகிறது. பாதிரி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை, தேவாலயத்திலிருந்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை” என தெரிவித்தார்.