ஜாக்டோ – ஜியோ மென்மையான போராட்டம்

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, ஜாக்டோ – ஜியோ சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கு அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆதரவு அளித்தார். இதையடுத்து நடந்த சட்டசபைத் தேர்தலில், ஜாக்டோ – ஜியோ அமைப்பினரின் தீவிர ஆதரவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது தி.மு.க. ஆனால், அதன் பிறகு ஜாக்டோ – ஜியோவினர் முன் வைத்த கோரிக்கைகளுக்கு தி.மு.க அரசு செவி சாய்க்கவில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்த ஜாக்டோ ஜியோ, தற்போது போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து நடைபெற்ற கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள 3 சதவீத அகவிலைப்படியை, தமிழக அரசும் ஊழியர்களுக்கு முன் தேதியிட்டு வழங்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய சரண்டர் விடுப்பு வழங்க வேண்டும். தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செயல்படும் தமிழக நிதியமைச்சரின் போக்கையும், பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர், அரசு ஊழியர், பணியாளர்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளின் போக்கையும் கண்டித்து, வரும் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அடுத்த மாத இறுதியில் ஜாக்டோ – ஜியோவின் பென்ஷன் மீட்பு மாநாடு நடத்தப்படும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், முந்தைய ஆட்சியின்போது காட்டிய ஆக்ரோஷத்தை தற்போது காட்டாமல் தி.மு.க ஆட்சியாளர்களிடம் மிக மென்மையாகவே நடந்துகொள்கின்றர், இதன் ரகசியம் என்னவோ? என சமூக உடகத்தினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.