பயங்கரவாதிகளிடம் இத்தாலி துப்பாக்கி

கன்னியாகுமரி, களியக்காவிளையில், கடந்த 2020, ஜனவரியில், சிறப்பு எஸ்.ஐ., வில்சனை சில மர்ம நபர்கள் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக, தௌபீக், அப்துல் ஷமீம், உள்ளிட்ட 7 பயங்கரவாதிகளை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள், இதன் தலைவனான ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி காஜா மொய்தீனை டில்லியில் கைது செய்தனர். விசாரனையில், காஜா மொய்தீன்தான் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய, இத்தாலி நாட்டு 7.65 பிஸ்டல் துப்பாக்கியை வாங்கினான். அவனுக்கு மும்பையில்உள்ள இஜாஸ் பாட்ஷா என்பவன் உதவி உள்ளான் என தெரியவந்தது. மேலும், இதன் பின்னணி, சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.