குண்டு வீசிய பி.எப்.ஐ அமைப்பினர்

பொள்ளாச்சியில் பா.ஜ.க, ஹிந்து இயக்க பிரமுகர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட வழக்கில் பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியைச் சேர்ந்த முகமது ரபீக், ரமீஸ் ராஜா, மாலிக் என்ற சாதிக் பாஷா ஆகியோர் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ஜவுளிக்கடை நடத்தி வரும் முகமது ரபீக் பி.எப்.ஐ பொள்ளாச்சி நகர செயலாளராக உள்ளார். மற்ற இருவரும் பி.எப்.ஐ அமைப்பின் உறுப்பினர்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல மதுரையில் வசிக்கும் ஆர்.எஸ்எ.ஸ் நிர்வாகியான கிருஷ்ணனின் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் மதுரையை சேர்ந்த உசேன், சம்சுதீன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட மதுரை மாப்பாளையத்தில் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தும் அபுதாகிர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். உசேன், சம்சுதீன் ஆகியோர் இந்திய முஸ்லிம் லீக் (ஐ.எம்.எல்) கட்சியை சேர்ந்தவர்கள். அபுதாகீர் பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்தவர் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.