இது ஒரு தேசபக்த அமைப்பு

எர்ணாகுளத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ்ஸின் ‘விஜயதசமி’ விழாவில் உரையாற்றிய முன்னாள் தலைமை நீதிபதி ஜே பி கோஷி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்று சித்தரிக்கும் முயற்சிகளை கண்டித்தார், இது போன்ற கருத்துக்கள் முற்றிலும் பொய், இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, மதம், ஜாதி, பாலினம் போன்ற வேறுபாடுகள் இன்றி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் இணைக்க முயற்சிக்கிறது. பாரதத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு சிறந்த தேசபக்தி அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்று கூறினார். மேலும், கேரளாவில் வெள்ளம், கொரோனா தொற்றுநோய் பொதுமுடக்கக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி போன்ற அமைப்புகள் செய்த பல முன்மாதிரியான சேவைப் பணிகளையும் பாராட்டினார். ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற ஹிந்துக்கள் மீதான வன்முறைகள், ஆப்கானிஸ்தானில் குருத்வாராக்கள் மீது தலிபான்களின் தாக்குதல்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், நீதிபதி கோஷி தான் ஒரு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் உறுப்பினர் என்பதையும் அக்கூட்டத்தில் தெரிவித்தார்.