இது கிறிஸ்தவர்களின் அரசு

எஸ்.கே. தூய பவுல் குருத்துவ கல்லுாரியின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக அரசின் சபாநாயகர் அப்பாவு, “பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த சட்டங்களால், அனைவருக்கும் கல்வி கிடைத்தது. கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றவர்களுக்கு சிலை வைத்து பெருமை சேர்த்தவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. தமிழகம் கல்வியில் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் கத்தோலிக்க கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள். கிறிஸ்தவ பாதிரிகள் இல்லையென்றால் பீஹார் போல் தமிழகமும் இருந்திருக்கும். என்னை உருவாக்கி இந்த இடத்திற்கு கொண்டு வந்தது கத்தோலிக்க பாதிரிகள்தான். இந்த அரசு உங்கள் அரசு, உங்களால் உருவாக்கப்பட்ட அரசு, உங்களுக்கான அரசு. சமூக நீதி, திராவிட மாடல் என்று சொல்லுகின்ற இந்த அரசுக்கு, முழு மூல காரணம் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தான், கிறிஸ்தவ பாதிரிகள்தான். இது உங்களால் உருவாக்கப்பட்ட அரசு என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன். தம்பி இனிகோ இருக்கிறார். பீட்டர் அல்போன்ஸ் இருக்கிறார். நீங்கள் தான் அஸ்திவார கற்கள். உங்களுக்கு மேல் கட்டப்பட்டது தான் இன்றைய தமிழகம்” என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் சபாநாயகரை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.