ஐ.எஸ்’சின் முதல் தற்கொலை வெடிகுண்டு

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்பான முதல் தற்கொலை வெடிகுண்டாக செயல்பட்டவர், லிபியாவில் ஒரு ஜிஹாத் நடவடிக்கையின் போது தன்னைத்தானே வெடிக்கச் செய்து இறந்த ஒரு மலையாளப் கணினி பொறியாளர். மதம் மாறிய பிறகு அவர் பெயர் அபூபக்கர் அல் ஹிந்தி என்று ஐ.எஸ்.ஐ.எஸ் ஊதுகுழலான கோரோசன் உறுதிப்படுத்தியுள்ளது. இவர் முதலில் ஒரு கிறிஸ்தவராக இருந்தார். பெங்களூருவில் ஐ.டி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். பின்னர் மேற்கு ஆசியாவில் அவர் பணிபுரியும் போது சில தீவிர முஸ்லீம்களின் மூளைச்சலவையால் அவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினார். இதேபோல நன்கு படித்த மற்றொரு கிறிஸ்தவரும் மதம் மாறிய பிறகு, தற்கொலை வெடிகுண்டாக மாறி ஆப்கானிஸ்தானில் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டார். இவர்கள் மட்டுமல்ல, கேரளாவில் இருந்து பல ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்குப் பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர் அல்லது வலுகட்டாயமாக இணைக்கப்பட்டனர். லவ் ஜிஹாத் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டு, கடத்தப்பட்டு இந்த பயங்கரவாத அமைப்பினருக்கு அடிமைகளாக விற்கப்பட்ட பெண்களும் ஏராளம். இதில் பலர் உயர் கல்வியறிவு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.