வெள்ளிக் கிரகம் பற்றிய கருத்தரங்கில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் சோம்நாத், ‘வெள்ளி கிரகத்திற்கான திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. விண்கலம், வெள்ளியில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகள், வளிமண்டல அமைப்பு, வெள்ளியில் சூரிய துகள்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்யும். 2024 டிசம்பரில் வெள்ளி கோளுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அப்போது வெள்ளிக் கோளும், பூமியும் நெருக்கமாக நேர்கோட்டில் அமைந்திருக்கும். அதனால் விண்கலத்தை குறைந்த அளவு உந்துசக்தியைப் பயன்படுத்தி வெள்ளி கோளின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியும். இதுபோன்ற அடுத்த வாய்ப்பு 2031ல் தான் கிடைக்கும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான நிதியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. நம்மிடம் இன்றைக்கு இருக்கும் திறனால் வெள்ளி கிரகத்திற்கான விண்கலனை உருவாக்கி அதனை வெள்ளியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியும். அதனையும் மிகக் குறுகிய காலத்தில் செய்யும் திறன் பாரதத்திடம் உள்ளது’ என கூறினார்.