குடியரசு தினத்தில் இஸ்லாமியக்கொடி

உத்தரப் பிரதேசம் பாரபங்கியில் உள்ள மதரசாவில் நாட்டின் 74வது குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றாமல் மதரசா நிர்வாகிகள் இஸ்லாமியக் கொடியை ஏர்றி மாணவர்களுக்கு இனிப்புகளை கொடுத்துள்ளனர். மேலும் அரசு அறிவுறுத்தியபடி மதரசாவில் அவர்கள் தேசிய கீதத்தையும் பாடவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பானது. இதுகுறித்து கேட்டதற்கு, கடந்த 15 ஆண்டுகளாகைந்த  மதரசா இயங்கி வருகிறது. இஸ்லாத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு எங்கள் மதத்தில் அனுமதி இல்லை. தேசிய பண்டிகைகளை கொண்டாட இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது சொஹ்ராப் மற்றும் முகமது தஃப்சில் தப்ரேஸ் மிஜம்முதீன் ரிஸ்வான் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஆசிப் என்ற நபர் தலைமறைவாகிவிட்டார். தற்போது தலைமறைவாக உள்ள ஆசிப் என்ற நபரே கொடியை ஏற்றியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை விமர்சித்த பல நெட்டிசன்கள், அந்த மதரசா நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.