தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்பட்டு வந்தனர்.இவர்கள் கோவையைச் சேர்ந்த ஹிந்து மதத் தலைவர்களை கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தனர்.இந்த தகவலையடுத்து, அந்த 7 பேரையும் கடந்த 2010ம் ஆண்டில் என்.ஐ.ஏ கைது செய்து விசாரித்தது.பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவன் தலைமறைவாகியிருந்தான்.அவனை காவல்துறையினரும் என்.ஐ ஏவும் தீவிரமாக தேடி வந்த நிலையில், மயிலாடுதுறைஅருகேயுள்ள நீடூரில் உள்ள ஒரு கோழிக்கடையில் வேலை செய்து வந்து தெரிய வந்தது.அங்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆசிக்கை கைது செய்து, விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.