கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இரவு, பகலாக சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, உணவு, சிற்றுண்டிகளை வழங்க ஈஷா முடிவு செய்துள்ளது. தற்போது, சென்னை, கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி போன்றவற்றை ஈஷா வழங்கி வருகிறது. தருமபுரி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இன்னும்|ஓரிரு நாட்களில் வழங்கப்பட உள்ளது.புதுச்சேரியில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கான சிற்றுண்டி பாக்கெட்டுகள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் நேரில் வழங்கப்பட்டது. இதைத்தவிர, கோவையில் 43 கிராமங்களை தத்தெடுத்து கரோனா நிவாரணப் பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.’ என கோவை ஈஷா யோகா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.