இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியா?

பா.ஜ.க மாநில தாழ்த்தப்பட்டோர் அணி தலைவர், ‘தடா’ பெரியசாமி, ‘1971ல் பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதம் உயர்த்தியதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்போது இருந்த மக்கள் தொகை அடிப்படையில், வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை தான் வழங்கினரே தவிர, யாரும் யாருக்கும் யாசகம் கொடுக்கவில்லை. அப்படி சலுகை வழங்கி இருந்தால், இப்போதும் வழங்கி இருக்க வேண்டுமே. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில், தாழ்த்தப்பட்ட இனத்தவர், 24 சதவீதமாக உள்ளனர். அப்படி என்றால், 18 சதவீத இட ஒதுக்கீட்டை, 24 சதவீதமாக ஏன் உயர்த்தவில்லை?’ என கேட்டுள்ளார். மேலும், இலவச டி.வி திட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலத் துறை நிதியை பயன்படுத்தியது, ஆதிதிராவிடர் நலத் துறை நிதியில் சமத்துவபுரத்தை  அமைத்துவிட்டு அதில் வெறும் 40 சதவீத வீடுகளை மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கியது, பட்டியல் இனத்தவருக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பயன்படுத்தாமல் அதனை தி.மு.க அரசு கடந்த பல வருடங்களில் திருப்பி அனுப்பியது போன்ற பல பட்டியலினத்தவர்களுக்கு எதிரான தி.மு.க அரசின் செயல்பாடுகளை பட்டியலிட்டு விமர்சித்துள்ளார். இது தான் திராவிட மாடல் ஆட்சி என்றால், அப்படியொரு ஆட்சியே தேவையே இல்லை என்று கூறியுள்ளார்.