இதுதான் திராவிட மாடலா?

திருவண்ணாமலை மாவட்டம் நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவரும், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளருமான கருணாநிதி என்பவர், வடபுழுதியூர் கிராமத்தை சேர்ந்த 30 பேரின் நிலங்களை போலி பட்டா மூலம் தனது பெயருக்கு மாற்றி மிகப்பெரிய மோசடியை செய்துள்ளார் என குற்றச்சாட்டு வைக்கப்பட்ட சிறிது நாட்களில், தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதும் இதேபோன்றதொரு குற்றச்சாட்டு தற்போது சுமத்தப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் கீழ்எடையாளம் பகுதியில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் புதிய கல்லூரி ஒன்றை கட்டி வருகிறார். தனது கல்லூரிக்கு தேவையான நிலத்தை அவர் அப்பகுதி பட்டியல் சமூக மக்களிடம் இருந்து அபகரித்துதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மயிலம் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வ சீமான், ஒரு பெரிய கூட்டத்துடன் கல்லூரி வளாகத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டார். கட்சி கொடி கட்டிய டிராக்டருடன் சென்று, கல்லுாரிக்கு எதிரிலுள்ள காலி இடத்தை உழுது போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கு வி.சி.க. மற்றும் தி.மு.க.வினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  அங்கு வந்த மயிலம் காவல்துறையினர் வி.சி.கவினரை அப்புறப்படுத்தினர். இதனால், அதிருப்தியடைந்த வி.சி.கவினர், தி.மு.கவை விமர்சித்து ‘பஞ்சமி நிலத்தை அபகரிப்பது தான் திராவிட மாடலா?’ என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டினர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பஞ்சமி நிலம் ஆக்கிரமமிப்பு குறித்தோ, அங்குள்ள பட்டியலின பழங்குடியின மக்களின் நலன் குறித்தோ சிந்திக்காமல், தன் சுய லாபத்தில் மட்டுமே கண்ணாக உள்ள திருமாவளவன் செல்வ சீமானை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார்.