கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பயணியர் தங்கும் விடுதியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இரு தினங்களுக்கு முன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், அரசு அதிகாரிகள், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது அங்கு சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்ட எம்.எல்.ஏ எழிலரசன், அமைச்சர், ஆட்சியர் முன்னிலையிலேயே அதிகாரிகளை ‘செருப்பு பிய்ந்து விடும்’ என்று மிரட்டினார். பின்னர் சுற்றி பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதால் இதற்கு மேல் பேசவில்லை என மிரட்டலை நிறுத்தினார்.
இதேபோல, கடந்த அக்டோபர் 18 அன்று திருச்செந்தூரில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்ட காவலர் முத்துக்குமாரை தி.மு.க அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணனின் உதவியாளர் கிருபா, தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கண்ணத்தில் அறைந்துள்ளார். அந்த காவலர் இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி, தி.மு.கவினரின் அட்டூழியங்கள் அதிகரித்துவரும் நிலையில், தி.மு.க முதல்வர் ஸ்டாலின், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா அல்லது தி.மு.கவில் இது எல்லாம் சகஜம் என இருந்துவிடுவாரா?