இதுதானா மதச்சார்பின்மை?

பாரதத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான போலி மதச்சார்பின்மையையும் பாசாங்குத்தனத்தையும் எடுத்துக்காட்டும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, ரயிலில் தொழுகை நடத்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக மந்திரம் ஓதத் தொடங்கிய முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ரயில் ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முன்னாள் ராணுவ வீரரான விலாஸ் நாயக் என்பவர், ஸ்வர்ன் ஜெயந்தி விரைவு ரயிலி, ஹஸ்ரத் நிஜாமுதீனிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பயணித்தார். அதே பெட்டியில் இருந்து ஒரு முஸ்லிம் குழுவினர், ரயிலில் பயணிக்கும் மக்கள் செல்வதற்கு வழி தராமல் குறிப்பிட்ட இடைவெளியில் நமாஸ் செய்து கொண்டிருந்தனர். நாயக் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது, மேலும், அவர் கழிப்பறைக்கு செல்ல வழி கேட்டபோது, முஸ்லிம்கள் நமாஸ் செய்வதாகக் கூறி வழிவிட மறுத்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாயக் தனது ஹிந்து மத பிரார்த்தனைகளை சொல்லத் தொடங்கினார். அப்போது, ரயிலின் பேன்ட்ரி ஊழியர் ஒருவர் அவரை ஒதுங்குமாறு கூறினார். ஆனால், நாயக் அதற்கு மறுத்துவிட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது யாரும் அவர்களைத் தடுக்கவில்லை, பிறகு ஏன் என்னுடைய பிரார்த்தனையை தடுக்கிறீர்கள் என நாயக் கேட்டார். இதனையடுத்து ரயில் ஊழியர்களால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேன்டரி மேலாளர் மற்றும் இதில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரயிலில் பயணம் செய்த முசாகிர் அகமது அவர்கள் தொழுகை நடத்தியதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.