அண்மையில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவா மாநிலத்தை அவமதித்து பேசியதாகக் கூறப்படுகிறது.இதற்கு கோவா மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆனால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறிவிட்டார் பழனிவேல் தியாகராஜன்.இந்நிலையில், தியாகராஜன்தமிழகத்தை களங்கப்படுத்திவிட்டார்.மன்னிப்பு கேட்க வேண்டும், என தனது டுவிட்டர் பக்கத்தில் பி.டி.ஆரை டேக் செய்து டுவிட் போட்டார் வானதி சீனிவாசன்.இதற்கு நீங்கள் பிறவியிலேயே பொய்யரா, ஐ.கியு திறன் குறைவா? என பொறுப்பில்லாமல் கேட்ட தியாகராஜன், கெட்ட நாற்றத்திற்கு ஜன்னலை மூடுவதைபோல நான் உங்களை பிளாக் செய்கிறேன் என கூறி பதிலுக்கு காத்திராமல் வானதி சீனிவாசனின் டுவிட்டர் ஐடியை பிளாக் செய்து விட்டார்.பின்னர், இதை குறித்து வானதி சீனிவாசன், ‘எம்.ஐ.டியில் படித்த நிதியமைச்சருக்கு அரசியல் முதிர்ச்சியோ சமூக அக்கறையோ இல்லை’ என்று கூறினார். தன் கருத்துகளுக்கு உடன்படாதவர்களிடம் இப்படி நடந்துகொள்வது பழனிவேல் தியாகராஜனுக்கு ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே, சத்குரு ஜக்கி வாசுதேவை தேவையே இல்லாமல் பழித்த இவர், முன்னாள் இன்போசிஸ் இயக்குனரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மோகன்தாஸ் பை மற்றும் தி ஹிந்து பத்திரிகையின் மாலினி பார்த்தசாரதி ஆகியோரிடமும் இப்படி கண்ணியமற்ற முறையில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.