இதற்கா அரசு மானியம்?

மத்திய அரசு, முஸ்லிம்கள் தங்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள பல்வேறு சலுகைகள், மானியங்களை அளித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், முந்தைய காங்கிரஸ் அரசு செய்துகொடுத்த வசதிகளைவிட மிக சிறப்பாக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. ஹஜ் பயணத்தின்போது, அங்கே தங்க நல்ல தங்குமிடங்கள், தங்குமிடத்திற்கே வரும் நல்ல தரமான உணவு, புதிய வோல்வோ பேருந்துகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், ஹஜ் பயணம் செய்யும் யாத்ரிகர்கள் அங்கு சென்று, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அழிய வேண்டும் என பிரார்த்தனை செய்யும் வீடியோ, சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.