மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘கொரோனா தடுப்பூசிக்கான மத்திய அரசின் கொள்கை, சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளது. ‘தடுப்பூசிகள் தயாரிக்கும், சீரம், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு பெற்றுக்கொள்ளும். மீதியுள்ள 50 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகளும், தனியாரும், அந்த நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்’ என, கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த கொள்கையால், அரசு தடுப்பூசி மையங்களில் நெருக்கடி குறைந்துள்ளது. வசதியுள்ளவர்கள், தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். மத்திய அரசு 50 சதவீத தடுப்பூசிகளை, மாநிலங்களின் தேவைக்கேற்ப பிரித்து வழங்கி வருகிறது. இதில் எவ்விதத்திலும் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. பெரிய தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளை அதிகளவில் வாங்கியுள்ளன என கூறப்படுவதும் தவறு. சிறிய நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், ‘கோவிஷீல்டு, கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகின்றன’ என தெரிவித்துள்ளார்.