தடுப்பூசி சான்றிதழில் பிழையா?

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் வெளிநாடு பயணங்கள், வேலை வாய்ப்பு போன்ற காரணங்களுக்கு உதவும் ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிரது. இந்த கோவின் தடுப்பூசி சான்றிதழ்களில், பெயர், பிறந்த ஆண்டு மற்றும் பாலினம் ஆகியவற்றில் பிழைகள் வந்தால், கோவின் வலைத்தளத்தில் சென்று திருத்தங்களைச் செய்யலாம் என்று ஆரோக்கிய சேது ஆப் வெளியிட்ட டுவீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் சுய மதிப்பீட்டு செயல்முறை மூலம் ஆரோக்யா சேது பயன்பாட்டில் தங்கள் நிலையை தானாக முன்வந்து புதுப்பிக்க அரசாங்கம் அனுமதித்திருந்தது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அவர்களின் ஆரோக்கிய சேது ஆப்’பின் முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்படும் தடுப்பூசி நிலை அல்லது ஸ்டேட்டஸில் நீல நிற கோடுடன் ஆரோக்யா சேது லோகோவுடன் ஒற்றை டிக் கிடைக்கும். இரண்டாவது டோஸ் செலுத்திய 14 நாட்களுக்குப் பிறகு, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இரட்டை டிக் கொண்ட ‘ப்ளூ ஷீல்ட்’ ஆப்பில் தோன்றும்.

பிழைகளை சரி செய்யும் வழிமுறைகள்: http://cowin.gov.in தளத்துக்குச் சென்று, பதிவு / உள்நுழை (Register/Sign In) என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அலைபேசி எண்ணை பதிவிட்டு அந்த எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.யை கொடுக்க வேண்டும். பின்னர், தனிநபர் தகவல் பகுதிக்கு சென்று, Raise an Issue என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், ’சான்றிதழில் திருத்தம்’ (Correction in Certificate)என்பதை தேர்வு செய்து தேவைப்படும் திருத்தங்களை செய்துகொள்ளலாம்.