பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் நியமனங்களை மாநில அரசின் கட்டுபாட்டில் கொண்டு வருவோம் என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியதற்கு, கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘தமிழகத்தில் 50 வருடங்களாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்கள் சாதி, மத, ஊழல், சொந்த பந்த சகதிகளில் சிக்கித் தவித்தன. அதிக தொகை தர முன் வருவோருக்கே துணை வேந்தர் பதவிகள் வழங்கப்பட்டன. தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஊழல் கழகங்களாகவே பரிணமித்தன. ஆராய்ச்சியின் இருப்பிடமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு ’பட்டம்’ அளிக்கும் ஒரு சாதாரண நிறுவனமாகவே குறுகிப் போய்விட்டன. துணைவேந்தர் நியமனங்கள் ஆளுநர் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்து. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களை அகற்றி விட்டு அவற்றை அபகரிக்கவும், பல்கலைக் கழகங்களை குடும்பச் சொத்தாக்கி ஊழல் குப்பை மேடாக்கவும் எண்ண வேண்டாம். லட்சக் கணக்கான ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்க வேண்டாம். எச்சரிக்கை செய்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.