கோவையை புறக்கணிக்கிறதா தி.மு.க அரசு?

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறி வருவது நன்றாகவே தெரிகிறது. இவ்வேளையில், பா.ஜ.கவின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஒரு தடுப்பூசிகூட போடப்படவில்லை. எப்பொழுது கிடைக்கும் என்றும் தெரியவில்லை. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், ‘தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்: 86,55,010. மீதம் உள்ள கையிருப்பு தடுப்பூசிகள் 13,63,494. அடுத்து மே 31க்கு உள்ளாக கொடுக்கப்படவிருக்கும் தடுப்பூசிகள் 5,89,850. எனவே 15 நாட்களுக்கான மேல் தேவையான தடுப்பூசிகள் தமிழகத்திற்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதற்கு மாநில அரசின் நிர்வாகக் குளறுபடிகளே காரணம். கோவை மாவட்டத்தில் தி.மு.க வெல்ல முடியாத காரணத்தால் இப்படி அங்குள்ளவர்களை பழிவாங்குகிறதா? என பா.ஜ.கவினரும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.