சென்னை கேகே நகர் பகுதியில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ‘பள்ளியில் நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து, விசாரணையை நியாயமான முறையில் மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. அதே சமயம், பள்ளிக்கு எதிராக வன்மத்தோடு சிலர், திராவிடர் கழக முத்திரையுடன் இயங்கி வருவதும், அதை வைத்து, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது போல, ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். அது தவறு.ஸ்டாலினின் மனைவி துர்காவின் கடவுள் சிந்தனை, வழிபாடு பலனாகத்தான், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அதை, அவர் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ளதி.மு.க, எல்லா விஷயங்களிலும் தெளிவாக முடிவெடுக்க வேண்டும் இல்லையென்றால் ஆட்சியை கலைக்கும் சூழல் உருவாகும். ஒருவேளை, உள்நோக்கம் கொண்டு செயல்பட்டால் நானே ஆட்சியை கலைப்பேன், கட்டாயம் அதை செய்து காட்டுவேன்.இந்தப் பள்ளியில் சீட் கேட்டு சிபாரிசு செய்தவர்கள் பலரையும், நிர்வாகத்தினர் ஆணவத்தோடு அவமரியாதை செய்திருக்கின்றனர்.அதெல்லாம் கூட, இந்தப் பிரச்னை பூதாகரமாக்கப்படுவதன் பின்னணியாக இருக்கின்றன.இதன் பின்பாவது பள்ளி நிர்வாகம் ஆணவத்தோடு நடப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.என்னைப் பொறுத்தவரை விசாரணை ஒரு தலைபட்சமில்லாமல் நேர்மையாக நடக்க வேண்டும்.அதில் துளியளவு சந்தேகம் ஏற்பட்டாலும், தமிழகத்தில் விசாரணை நடக்கவிடாமல் செய்து விடுவேன் என்று எச்சரித்துள்ளார்.