நேதாஜி அஸ்தி உண்மையா?

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1945ல் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னமும் விலகாமல் நீடிக்கின்றன. நேதாஜியின் அஸ்தி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள ரெங்கோஜி புத்தர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் வசிக்கும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பேரன் சூர்ய குமார் போஸ், ஜப்பானில் ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தியை, மரபணு சோதனை நடத்தி, அது அவரது அஸ்திதானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அஸ்தியிலுள்ள எலும்புகள் இன்னும் சேதமடையாத நிலையில் இருக்கின்றன. எனவே அதை மரபணு சோதனைக்கு உட்படுத்தமுடியும் என நம்புகிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.