எஸ்.டி.பி.ஐ. கட்சியின் இளைஞர் அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநாடும், பாரதத்தின் 75வது சுதந்திர தின விழாவும் நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய பி.எப்.ஐ நிர்வாகிகள் சிலர், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர். சிலர் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினர். சிலர் மதத்தை பரப்புவது குறித்து பேசினர். இம்மாநாட்டில் பேசிய ஒரு பேச்சாளர், ‘மோடி அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் புதிய இந்தியா பிறக்கப் போகிறது, புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்று பி.எப்.ஐயும் சொல்கிறது. அதற்கு நாங்கள் ஒரு இலக்கை வைத்திருக்கிறோம். 2047ல் உமரின் இந்தியாவை உருவாக்குவோம். இதற்காக பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் கீழ் இந்தியாவில் 2.50 லட்சம் ஹம்சாக்கள் தயாராக உள்ளனர். இவர்கள் உமரின் இந்தியாவை உருவாக்க தங்களது உயிரைக் கொடுக்கவும் தயாராக உள்ளனர். கொண்ட லட்சியத்துக்காக உயர் துறக்கும் கூட்டம் இது” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். வன்முறையைத் தூண்டும் வகையிலும், தேசத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் பி.எப்.ஐ நிர்வாகி பேசியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.