பில்லியனரும் முதலீட்டாளரும் மொபியஸ் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனருமான மார்க் மொபியஸ், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாட்டின் மூலதனக் கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவிலிருந்து எனது பணத்தை எடுக்க என்னால் முடியவில்லை. இறுக்கமான அரசுப் பிடியில் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஷாங்காயில் எஸ்.எஸ்.பி.சியில் எனது கணக்கு இருப்பதால் நான் தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது பணத்தை என்னால் வெளியே எடுக்க முடியவில்லை. நாட்டிற்கு வெளியே பணம் செல்வதை சீன அரசு கடுமையாக கட்டுப்படுத்துகிறது. இனி நான் சீனாவில் முதலீடு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பேன். அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தை அவர்களிடம் இருந்து என்னால் பெற முடியவில்லை. சீனர்கள் எல்லா வகையான தடைகளையும் போடுகிறார்கள். என் பணத்தை கேட்டால், நீங்கள் இந்த பணத்தை எப்படி சம்பாதித்தீர்கள் என்பதற்கான 20 வருட பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு கொடுங்கள் என கேட்கின்றனர். இது பைத்தியக்காரத்தனம். சீனாவின் அடிமட்டம் அதன் முன்னாள் திறந்த மனதுடைய சந்தைப் புரட்சிகரத் தலைவர் டெங் சியாவோபிங்கை விட முற்றிலும் வேறுபட்ட திசையில் நகர்கிறது. இது ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கவில்லை. இன்று மிகவும் பொருளாதார வாய்ப்புள்ள, சிறந்த முதலீட்டு மாற்று பாரதம் தான். உங்களிடம் ஒரு பில்லியன் மக்கள் உள்ளனர், சீனர்கள் என்ன செய்கிறார்களோ அதையே அவர்களால் செய்ய முடியும். அவர்களால் அதே வகையான உற்பத்தி மற்றும் பலவற்றைச் செய்ய முடியும். நான் இப்போது பிரேசிலில் இருக்கிறேன், இதுவும் சீனாவுக்கு மற்றொரு மாற்று தான்” என கூறினார்.