தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல்

சமீபத்தில் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பேசிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, “மேற்கு வங்க மாநிலம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில் மேற்கு வங்க அரசின் காவல்துறையும் அரசு நிர்வாகமும் படத்திற்கு சட்டவிரோத தடை விதித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக தெரிவிக்கின்றனர். இதனால் நான் அதிர்ச்சியடைகிறேன். திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் பயந்துள்ளதால், அவர்களால் வெளியில் வந்து இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிட முடியவில்லை. முன்பதிவு நிலையத்தைத் திறந்தால் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கருதுகின்றனர். மேலும், அவர்களுக்கு சமூக விரோதிகள், காவல்துறை மற்றும் அரசி நிர்வாகத்திடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. இதனால், தியேட்டர் உரிமையாளர்களால் படத்தை இயக்க முடியவில்லை. இது மிகவும் ஆட்சேபனைக்குரியது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியவுடன் அந்த உத்தரவை அனைவரும் முழுவதுமாக பின்பற்றுவது நமது கடமையாகும். எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவு மேற்கு வங்கத்தில் பின்பற்றப்படாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இது ஒரு தீவிரமான விஷயம். படத்தை பார்ப்பது மக்களின் உரிமை என்பதால், மாநில அரசு இந்த படத்திற்கு விதிக்கப்பட்ட மறைமுகத் தடையை நீக்காவிட்டால், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்” என்று கூறினார்.