மதம் மாற பத்திரிகையாளருக்கு மிரட்டல்

டெல்லியின் ப்ரீத் விஹாரில் அலுவலகம் உள்ள நியூஸ் ஆக்ஷன் நெட்வொர்க் என்ற இணையவழி யூடியூப் செய்தி சேனலில் வேலை பார்க்கும் பெண் பத்திரிகையாளர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “அந்த சேனலின் நிர்வாக இயக்குனர் ஷான் சௌத்ரி, நீங்கள் பார்ப்பதற்கு முஸ்லிம் போலவே உள்ளீர்கள். எனவே நீங்கள் முஸ்லிமாக மதம் மாறிவிடுங்கள். அப்படி மாறினால் உங்கள் சம்பளத்தை 25 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தித் தருவேன் என வற்புறுத்தி வந்தார். அது எனக்கு குமட்டலை ஏற்படுத்தியது. இதனால், நான் ராஜினாமா செய்தேன். ஆனால் நிறுவனம் எனது 45 நாட்களுக்கான சம்பளத்தை நிறுத்தி வைத்தது. 47வது நாள், என்னை அலுவலகத்திற்கு அழைத்தனர். அங்கு ஷான் என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டார். கீழ்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். கொலை மிரட்டலும் விடுத்தார். எப்படியோ அங்கிருந்து வெளியேறி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். 2 மாதங்கள் ஆகியும் காவல்துறை இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஷானுக்கு அரசியல் தொடர்பு உள்ளது. அவர் சமாஜ்வாதி கட்சியுடன் நெருக்கமாக உள்ளார்” என தெரிவித்துள்ளார்.