குஜராத்தின் பாவ்நகரில் உள்ள சாத்விக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 15 வீடுகள் உள்ளன. அதன் உரிமையாளர்களை கடந்த வாரம், சுமார் 150 முஸ்லிம்கள் அடங்கிய ஒரு கும்பல் இரவில் வந்து வீடுகளை விற்கும்படி மிரட்டியது. உங்கள் தொழில், வியாபாரம் என அனைத்துத் தகவல்களும் எங்களுக்குத் தெரியும். இந்த குடியிருப்புகளை எங்களுக்கு விற்று விட்டுவிடுங்கள் அல்லது மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் மிரட்டியுள்ளனர். முன்பே பலமுறை அவர்களுக்கு மிரட்டல்கள் வந்தது என்றாலும் இம்முறை அது பயங்கரமான மிரட்டலாக இருந்ததால் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அப்பகுதியில் மத நல்லிணக்கத்தைப் பேண சில அமைப்புகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், பிளாட்களை விற்க உரிமையாளர்களிடையே மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கும் ஒரு உள்ளூர் பா.ஜக. தலைவரின் பங்கும் இதில் உள்ளது. பாவ்நகரில் வகுப்புவாத நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக ‘தொந்தரவு செய்யப்பட்ட பகுதிகள்’ என்ற சட்டத்தின் கீழ் சில பகுதிகளை அறிவிக்க சில ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழியப்பட்டது. ஆனால், அப்பகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், அதற்கான கோப்புகள் தேங்கியுள்ளது என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவதாக திவ்ய பாஸ்கர் பத்திரிகை தெரிவித்துள்ளது.