பயங்கரவாதி கூட்டாளிகளிடம் விசாரணை

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்ற கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி உயிரிழந்தான்.அவனரது வீட்டிலிருந்து வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் ரசாயனம் உள்ளிட்ட பொருட்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உயிரிழந்த முபின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் சிக்கின. இந்த வழக்கு தொடர்பாக பயங்கரவாதி முபினின் கூட்டாளிகளான கோவையைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரிஉஆஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.கைது செய்யப்பட்ட 6 பேரையும் காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்தனர்.பின்னர், கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தவுபீக், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய மேலும் 3 சந்தேக நபர்கள் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை 9 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் அனுமதி பெற்றனர். முதலில் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர், கோவைக்கு அழைத்து வந்து குண்டு வெடிப்பு நிகழ்வுக்க்கு சம்பந்தப்பட்ட உக்கடம், ஜி.எம்.நகர், அல் அமீன் காலனி, கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.