சந்தேக நபர்களிடம் விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த பயங்கரவாத சம்பவத்தை சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தை சேர்ந்த ஷாரிக் என்ற 22 வயது பயங்கரவாதி நிகழ்த்தினான். அவன் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஷாரிக் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். பயங்கரவாதி ஷாரிக்கின் அலைபேசி ஆய்வு செய்யப்பட்டு அவருடன் பேசியவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. அப்போது நாகர்கோவில் கோட்டார் கம்பளத்தில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜிம் ரகுமான் என்பவன் ஷாரிக்கிடம் பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அஜிம் ரகுமானை கடந்த 20ம் தேதி மாலை தனிப்படை காவலர்கள் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தினர். பிறகு, சொந்த மாநிலத்துக்கு செல்ல கூடாது, எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறி விடுவித்தனர்.