டெல்லியில் இன்டர்போல் கூட்டம்

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் பொதுச்சபை கூட்டம் டெல்லியில் வரும், அக்டோபர் 18ல் துவங்கவுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். இன்டர்போல் அமைப்பு, பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் மத்திய காவல்துறை அமைப்பின் தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட சுமார் 2,000 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டம் 25 ஆண்டுக்குப் பின் பாரதத்தில் நடக்க உள்ளது. கடந்த, 2019ல் பாரதத்துக்கு வந்த இன்டர்போல் பொதுச் செயலாளர் ஜர்கென் ஸ்டாக் உடனான சந்திப்பின்போது, பாரதத்தில் இந்தக் கூட்டத்தை நடத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார். நம் நாட்டின் சார்பில் இந்த அமைப்பில், சி.பி.ஐ இடம்பெற்று உள்ளது என்பதால், இன்டர்போல் பொது சபை கூட்டத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.பி.ஐ செய்து வருகிறது.