பாரதத்தின் ஐ.எப்.எப்.ஐ நடத்தும் 52வது சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல் 28வரை கோவாவில் நடைபெறுகிறது. இதில், உலகம் முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டு உள்ளன. தற்போதைய கொரோனா பாதுகாப்பு விதிகளைக் கருத்தில் கொண்டு விழா நேரடி மற்றும் இணையம் என்ற கலப்பு வடிவத்தில் நடைபெறும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விமர்சகர்கள், ஆர்வலர்களை இதில் கலந்துகொள்ள ஐ.எப்.எப்.ஐ வரவேற்றுள்ளது. விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 3 வருடங்களுக்கு ஐ.எப்.எப்.ஐ போன்ற முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். என சில நிபந்தனைகளும் உள்ளன. ஐ.எப்.எப்.ஐயின் நிகழ்ச்சிகள் பி.ஐ.பியின் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும், ஆன்லைனில் கேள்விகளைக் கேட்கவும் ஏற்பாடு செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டு உள்ளது.