லண்டனைச் சேர்ந்த ‘பிராண்டு பைனான்ஸ்’ என்ற பிராண்டுகளின் மதிப்பு ஆலோசனை நிறுவனம், நடப்பாண்டிற்கான 100 காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், உலகளவில் மதிப்பு மிக்க காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலில், 5 சீன நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதுடன் பிங் ஆன் என்ற சீன காப்பீட்டு நிறுவனம் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த பட்டியலில் நமது நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி பத்தாவது இடம் பெற்றுள்ளது. எல்.ஐ.சியின் பிராண்டு மதிப்பு கடந்த ஆண்டைவிட 6.8 சதவீதம் அதிகரித்து 8.65 பில்லியன்களாக உள்ளது. இதனைத் தவிர, ஜெர்மனியின் அலையன்ஸ், பிரான்சின் ஆக்ஸா, அமெரிக்க அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த முதல் பத்து இடங்களில் உள்ளன.