புத்தகக் கண்காட்சியில் ‘இன்ஷா அல்லா’ படம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 110 அரங்குகளுடன் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா தொடங்கியது. வரும் 27ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவில் இறுதி நாள் அன்று முஸ்லிம் மதத்தின் புகழ் பாடும் ‘இன்ஷா அல்லா’ என்ற மதம் சார்ந்த திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஹிந்து அமைப்பினர் கடும் அதிருப்பதியை தெரிவித்துள்ளனர். இத்திருவிழாவில் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒளிபரப்ப தமிழக அரசும், பபாசி நிர்வாகமும் அனுமதிக்குமா? அறிவை வளர்க்கும் புத்தகங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நடைபெறும் ஒரு மதசார்பற்ற திருவிழாவில் மதம் சார்ந்த திரைப்படங்களை வெளியிடுவது ஏன்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? தமிழக அரசு இதனை விசாரித்து அவர்களை கைது செய்வதுடன் பட திரையிடுதலையும் தடை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.