நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்த டிஜிட்டல் கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ” நம்முடைய புகழ் வெளிச்சம் படாத சுதந்திர போராட்ட மாவீரர்களின் உண்மையான பெருமையை மீட்டெடுக்கவும், வரலாற்றில் அவர்களுக்கு நடந்த அநீதியை அகற்றவும் இது சரியான சந்தர்ப்பம். கடந்தகால காங்கிரஸ் அரசுகள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சுதந்திர போராட்ட பங்களிப்பு, அரசியல் பாரம்பரியம் போன்றவற்றை வரலாற்றில் குறைத்து மதிப்பிட்டு காட்டியது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபா சாஹேப் அம்பேதேகர், சியாமா பிரசாத் முகர்ஜி, சர்தார் படேல் உள்ளிட்ட புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை மக்களுக்கு நினைவூட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நமது நாடு கடமைப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.