இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) சார்பில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டோரிடம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டோரில், 58.1 சதவீதம் பேரிடம், தற்போது பரவி வரும் கொரோனாவின் டெல்டா வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை. இரண்டு டோஸ் எடுத்தவர்களில், 16.1 சதவீதம் பேரிடம், நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை. முழுமையான பலன், பாதுகாப்பு பெறுவதற்கு, மூன்றாவது டோஸ் செலுத்துவது சிறந்ததாக இருக்கும். அதே நேரத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதன்பின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோருக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.