தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகள்

நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகமாகியுள்ள நிலையில், மாநில அரசுகள் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். தொற்று அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 8 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.