தவிர்க்க முடியாத உலகத் தலைவர் மோடி

இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷயரில் நடைபெற உள்ள இடைத் தேர்தலுக்காக, பேட்லி, ஸ்பென் பகுதிகளில் வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த, பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பாரதப் பிரதமர் மோடி, கடந்த 2019ல் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கைகுலுக்கிய புகைப்படம் இடம் பெற்றது. சமூக ஊடகங்களில், இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்தன. அந்த நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் இதனை ஆதரித்தாலும், எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி, தோல்வி பயத்தால் இதனை கடுமையாக எதிர்த்தது. இங்கிலாந்தில், புலம்பெயர்ந்த பாரதவாசிகள் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர் என்பதும் அவர்களின் ஓட்டு அங்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது.