பாரதம் அமெரிக்கா இடையிலான 11வது ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சிக் குழுவின் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. ராணுவ தளவாடங்களை இணைந்து தயாரித்தல், இணைந்து உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதே, ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சிக் குழுவின் நோக்கம். இதில், ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கான, திருத்தப்பட்ட அறிக்கையை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இந்தக் குழுவின் கூட்டம், ஆண்டுக்கு இருமுறை, பாரதத்திலும் அமெரிக்காவிலும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக இக்கூட்டம் தொடர்ந்து 2வது முறையாக காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டுள்ளது.